1. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
அ) மூன்று ஆ) நான்கு இ) ஐந்து [விடை: ஆ]
2. 'வரனசைஇ இன்னும் உளேன்! - இத்தொடரில் இடம்பெற்றுள்ள அளபெடை எவ்வகை
அளபெடை?
அ) செய்யுளிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை [விடை: இ]
3. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
அ) 11 ஆ) 13 இ) 15 [விடை: அ]
4. பொருத்துக.
1. ஓ ஒதல் வேண்டும் - அ) இன்னிசை அளபெடை
2. கெடுப்பதூஉம் - ஆ) செய்யுளிசை அளபெடை
3. உரனசைஇ - இ) ஒற்றளபெடை
4. எஃஃகிலங்கிய - ௩) சொல்லிசை அளபெடை
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ ஆ) 1-ஈ 2-இ 3-ஆ 4-அ
இ) 1-ஆ 2-இ 3-ஈ 4-அ ஈ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ [விடை: அ]
5. பொருத்துக.
1. கண்ணன் - அ) பொதுமொழி
2. மலர் வீட்டுக்குச் சென்றாள் - ஆ) தனிமொழி
3. வேங்கை - இ) தொடர்மொழி
அ) 1-இ 2-அ 3-௩ ஆ) 1-அ 2-இ 3-ஆ
இ) 1-ஆ 2-இ 3-அ ஈ) 1-இ 2-ஆ 3-அ [விடை: இ]
6. வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) உறாஅர் ஆ) கெடுப்பதூஉம்
இ) வரனசைஇ ஈ) வெஃஃகுவார் [விடை: ஈ]
7. பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) ஓஒதல் ஆ) உறா௫அர்க்கு இ) படாஅபறை ஈ) தம்பீஇ [விடை: ஈ]
8. சரியான கூற்றினைத் தேர்வு செய்க.
1. மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம்.
2. மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம் துணை செய்யும்.
3. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.
4. அளபெடை மூன்று வகைப்படும்.
1, 2, 3ம்-சரி, 4-தவறு ஆ) நான்கும் சரி
இ) 1, 2- சரி, 3, 4-தவறு ஈ) 1, 3, 4-சரி, 2-தவறு [விடை: அ]
9. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) கண்ணன் - தனிமொழி
ஆ) கண்ணன் வந்தான் - பொதுமொழி
இ) மலர் வீட்டுக்குச் சென்றாள் - தொடர்மொழி [விடை: ஆ]
10. பொதுமொழிக்குரிய சான்றினைத் தேர்வு செய்க.
அ) படி ஆ) வேங்கை
இ) கண்ணன் ஈ) கண்ணன் வந்தான் [விடை: ஆ]
11. எட்டு - எள் * து எனப் பிரிந்து தரும் பொருள்
அ) எட்டு ஆ) எள்ளை உண்
இ) வேகின்ற கை ஈ) எள்ளை எடு [விடை: ஆ]
12. பொருத்துக.
1. நடத்தல் - அ) எதிர்மறைத் தொழிற்பெயர்
2. கொல்லாமை - ஆ) வினையாலணையும் பெயர்
3. கேடு - இ) தொழிற்பெயர்
4. வந்தவர் - ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ ஆ) 1-இ 2-அ 3-ஈ 4-ஆ
இ) 1-இ 2-ஆ 3-௩ 4-அ ஈ) 1-இ 2-அ 3-ஆ 4-ஈ [விடை: ஆ]
13. வினையாலணையும் பெயர் சான்றாகி இடம்பெறும் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
அ) சுடுதல் ஆ) பிறவாமை
இ) பொறுத்தார் பூமியாள்வார் ஈ) பாடுதல் [விடை: இ]
14. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தட்டு ஆ) கேடு இ) உரை ஈ:) அடி [விடை: ஆ]
15. எதிர்மறைத் தொழிற்பெயர் சான்றினைத் தேர்ந்தெடுக்க.
அ) கொல்லாமை ஆ) வாழ்க்கை இ) நடத்தல் ஈ) சூடு [விடை: அ]
16. பகாப்பதச் சொல்லினைத் தேர்ந்தெடுக்க.
அ) கண் ஆ) படித்தான் இ) நடத்தல் ஈ) நடவாமை [விடை: அ]
17. மொழியின் சிறப்புகளை அறிய துணை செய்வது
அ) கவிதை ஆ) இலக்கணம்
இ) உரைநடை ஈ) எதுவுமில்லை [விடை: ஆ]
18. சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
அ) முப்பது ஆ) பன்னிரண்டு இ) பத்து ஈஃ) ஒன்பது [விடை: இ]
19. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) மூன்று இ) ஐந்து ஈ) ஆறு [விடை: ஆ]
20. நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன?
அ) செய்யுளிசை அளபெடை ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை ஈ) எதுவுமில்லை [விடை: அ]
21. சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?
அ) செய்யுளிசை அளபெடை ஆ) சொல்லிசை அளபெடை
இ) இன்னிசை அளபெடை ஈ) எதுவுமில்லை [விடை: ஆ]
22. மொழி என்பது எத்தனை வகை?
அ) இரண்டு ஆ) மூன்று இ) ஐந்து ஈ) ஆறு [விடை: ஆ
23. பழம் என்பது எதன் வகை?
அ) தொடர்மொழி ஆ) தனிமொழி
இ) பொது மொழி ஈ) எதுவுமில்லை [விடை: ஆ]
24. “அந்தமான்” என்பது எதன் வகை?
அ) தொடர்மொழி ஆ) தனிமொழி
இ) பொது மொழி ஈ) எதுவுமில்லை [விடை: இ]
25. பொருத்திக் காட்டுக.
1. அந்தமான் அ) தொடர்மொழி அ) 1-ஆ 2-ஈ 3-அ 4-இ
2. கண் ஆ) தொழிற்பெயர் ஆ) 1-ஈ2-அ 3-ஆ 4-இ
3. நடத்தை இ) பொதுமொழி இ) 1-இ 2-ஈ 3-ஆ 4-அ
4. கண்ணன்வந்தான் ஈ) தனிமொழி ஈ) 1-இ 2-ஆ 3-ஈ 4-அ [விடை: இ]
26. உறாஅர்க், வரனசைஇ - அளபெடை வகை
அ) சொல்லிசை, இன்னிசை ஆ) ஒற்றளபெடை, சொல்லிசை
இ) செய்யுளிசை, சொல்லிசை ௩) இன்னிசை, சொல்லிசை [விடை: இ]
1. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை
$ உயிர்மெய் குற்றியலிகரம்
6 ஆய்தம் * ஐகாரக்குறுக்கம்
6 உயிரளபெடை 6 ஒளகாரக்குறுக்கம்
6 ஒற்றளபெடை 6 மகரக்குறுக்கம்
* குற்றியலுகரம் * ஆய்தக் குறுக்கம்
2. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
குறுக்கங்கள் நான்கு வகைப்படும். அவை:
* ஐகாரக்குறுக்கம் * மகரக்குறுக்கம்
ஒளகாரக் குறுக்கம் அய்கதக் குறுக்கம்
3. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை? .
அளபெடை இரண்டு வகைப்படும். அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.
4. உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை:
செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை.
5. உயிரளபெடை என்றால் என்ன? சான்று தருக.
செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர் நெடில் எழுத்துகள்
ஏழும் அளபெடுக்கும்.
அளபெடுக்கும் போது அவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் பக்கத்தில் வரும்.
சான்று: உழாஅர்.
6. செய்யுளிசை அளபெடை ;/ இசைநிறை அளபெடை என்றால் என்ன? சான்று தருக.
செய்யுளின் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுக்கும்.
(ஈரசை கொண்ட சீர்களில் மட்டும் வரும்)
சான்று: உழாஅர் (உழா/அர்)
7. செய்யுளிசை அளபெடைக்கு மூன்று சான்று தருக.
ஒஒதல் வேண்டும் - மொழி முதல்
உறாஅர்க் குறுநோய் - மொழி இடை
நல்ல படாஅ பறை - மொழி இறுதி
8. இன்னிசை அளபெடை என்றால் என்ன? சான்று தருக.
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை
அளபெடை எனப்படும்.
சான்று: கெடுப்பதூஉம் (கெடுப்/பதூ/உம்) (மூவசை கொண்ட சீர்களில் மட்டும் வரும்)
9. சொல்லிசை அளபெடை என்றால் என்ன? சான்று தருக.
செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச்சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசையளபெடை
ஆகும்.
சான்று: வரனசைஇ.
10. ஒற்றளபெடை என்றால் என்ன? சான்று தருக.
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய சில மெய்யெழுத்துகளும், ஆய்த
எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடையாகும்.
சான்று: வெஃஃகுவார்க் கில்லை வீடு.
11. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகள் மற்றும் ஆய்த எழுத்து ஆகியவற்றை எழுது.
மெய் எழுத்துகள் - ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் (பத்து)
ஆய்த எழுத்து - ஃ (ஒன்று)
மொத்த எழுத்துகள் - 11
12. சொல் என்றால் என்ன?
ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சோந்தோ பொருள் தருமாயின் அது சொல் எனப்படும்.
சொல்லின் வேறுபெயர்கள் - பதம், மொழி, கிளவி)
13. மொழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
மொழி மூன்று வகைப்படும். அவை: தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி.
14. தனிமொழி என்றால் என்ன? சான்று தருக.
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி எனப்படும்.
சான்று: கண், படித்தான்.
15. தொடர்மொழி என்றால் என்ன? சான்று தருக.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது
தொடர்மொழி.
சான்று: கண்ணன் வந்தான்.
16. பொதுமொழி என்றால் என்ன? சான்று தருக.
ஒருசொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும்
தருவது பொதுமொழி ஆகும்.
தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமையும்.
சான்று: எட்டு.
எட்டு - எண்ணைக் குறிக்கிறது. எள் * து - எள்ளை உண்.
17. தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், பால், காலம் ஆகியவற்றைக்
குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
எ.கா: ஈதல், வாழ்க்கை.
18. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர்
ஆகும்.
சான்று: நடத்தல். நட - வினையடி, தல் - விகுதி.
19. எதிர்மறைத் தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் எனப்படும்.
சான்று: நடவாமை, கொல்லாமை.
20. தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்? அவை யாவை? ்
தொழிற்பெயர் இரண்டு வகைப்படும். அவை:
முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
21. முதனிலைத் தொழிற் பெயர் என்றால் என்ன? சான்று தருக.
விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும்.
சான்று: தட்டு, உரை, அடி - இச்சொற்கள் தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும்
போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
22. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பது விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வருவது. முதனிலை
திரிந்த தொழிற்பெயராகும்.
எ.கா: கெடு - கேடு, சுடு - சூடு.
கேடு, சூடு (கெடு, சுடு என்னும் முதனிலைகள் கேடு, சூடு எனத் திரிந்து வந்துள்ளது)
23. வினையாலணையும் பெயர் என்றால் என்ன? சான்று தருக.
வினையைக் குறிக்காமல் வினை செய்தவரைக் குறிக்கும்.
ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும்
வேறொரு பயனிலையைக் கொண்டு முடியும்.
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும்.
மூன்று காலங்களிலும் வரும்.
சானஙட வங்கள்